logo
அரசியல் கட்சி தொடங்கும் முடிவையே கைவிடுகிறாரா ரஜினிகாந்த்?   எந்த நேரத்திலும்  அறிக்கை வெளியாகலாம் ?

அரசியல் கட்சி தொடங்கும் முடிவையே கைவிடுகிறாரா ரஜினிகாந்த்? எந்த நேரத்திலும் அறிக்கை வெளியாகலாம் ?

29/Oct/2020 09:50:40

சென்னை: அரசியல் கட்சியை தொடங்கும் முடிவையே நடிகர் ரஜினிகாந்த் கைவிட இருப்பதாகவும் இது தொடர்பான அறிக்கையும் தயாராகிவிட்டது; எந்த நேரத்திலும் வெளியாகக் கூடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்தார். ஆனால் ரஜினிகாந்த் பகிரங்கமாக அறிவித்தும் ஆண்டுகள் ஓடியதுதான் மிச்சம். அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவதற்கான எந்த சமிக்ஞையுமே இல்லை.

ரஜினிகாந்த் இந்த தேர்தலுக்கு மட்டும் வர வேண்டாம்.. போயஸைத் தொடர்பு கொண்ட இருவர்.. திடீர் பரபரப்பு

ரஜினிக்கு நெருக்கடி: ரஜினிகாந்தைப் பொறுத்தவரை 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அரசியலுக்கு வருவார் என்கிற பிம்பத்தை சுமந்து வருகிறார். இதனை சில ஆண்டுகளுக்கு அவரே வெளிப்படையாக அறிவித்தார். ஆனாலும் இந்த அறிவிப்பு கூட கடுமையான நெருக்கடிகளால்தான் வெளியிடப்பட்டது என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்த கதை.

என்ன பேசினாலும் சர்ச்சை: அவ்வப்போது ரஜினிகாந்த் அபூர்வமாக தெரிவித்த கருத்துகள் அனைத்துமே சர்ச்சையாகிப் போனது. ஒருகட்டத்தில் ரஜினிகாந்த் அப்படியே கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தாலும் தான் முதல்வராகப் போவதில்லை எனவும் அறிவித்தார். அந்த அறிவிப்பிலேயே ரஜினிகாந்த்  பின் வாங்கிவிட்டார் என்றே சொல்லப்பட்டது.

ரஜினியை வைத்து காய் நகர்த்தல்கள்: இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ரஜினிகாந்த் எந்த சூழ்நிலையிலும் வந்துவிடவே கூடாது என்பதில் திமுக படுதீவிரமாக காய்களை நகர்த்தியது. ஆனால் டெல்லியோ எப்படியாவது ரஜினியை களத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பது என முடிவோடு இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஓய்ந்தபாடில்லை

அரசியலுக்கு குட்பை சொல்லும் ரஜினிகாந்த்: ஆகையால் கொரோனா பாதிப்பை முன்வைத்து ரஜினிகாந்த் கட்சியை தொடங்கும் முடிவை கைவிடுவார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை ரஜினிகாந்த் தரப்பு தயாரித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் ரஜினிகாந்தின் அறிக்கை வெளியாகக் கூடும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.       

Top