logo
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த நாகுடியில்  5,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த நாகுடியில் 5,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது.

28/Oct/2020 04:17:58

நாகுடி பகுதியில் இயங்கிவரும் பொதுப்பணிதுறை  நீர்வள ஆதாரஅமைப்பு கால்லணைக்கால்வாய் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. 

இந்த அலுவலகத்தில் உதவிபொறியாளர் தென்னரசு என்பவர்  விவசாயிபிரபாகரனுக்கு சொந்த கிராமமான அத்தாணி கிராமத்தில்  ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காக தடையில்லாச் சான்று வேண்டும் என கோரியுள்ளார்.  

தடையில்லாச் சான்று வேண்டுமென்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என தென்னரசு  கேட்டுள்ளார்.  லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி பிரபாகரன் தடையில்லாச் சான்று பெறுவதற்கு  உதவிப் பொறியாளர் 5,000 லஞ்சம் கேட்டது தொடர்பாக  ஊழல் தடுப்பு கண்காணிப்பு  பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார்.

இதையடுத்து,  ஊழல் தடுப்பு கண்காணிப்புப்பிரிவு  துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர் பீட்டர் ஆகியோர் தலைமையில் 7பேர் கொண்ட குழு கல்லணை கால்வாய் கோட்ட அலுவலகத்தில் உள்ளே  அதிரடியாகப்  புகுந்து சோதனையில் ஈடுபட்ட போது  விவசாயி பிரபாகரன், உதவிபொறியாளர் தென்னரசுக்கு வழங்கிய 5 ஆயிரம் லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வேறு எவரிடமும் இதை போல லஞ்சம் பெற்றுள்ளாரா  என்பது குறித்து போலீஸார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

                                                                               

   

Top