logo
விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிப் போராட்டம்

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிப் போராட்டம்

25/Apr/2020 06:54:04

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் விவசாயிகள் சங்கத்தின்  நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, கறம்பக்குடி அருகேயுள்ள தீத்தானிப்பட்டியில் உள்ள  அவரது வீட்டில் கருப்புக் கொடி கட்டினார். பின்னர், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பதாகையை பிடித்துக்கொண்டு குடும்பத்தினரோடு முழக்கங்கள் எழுப்பினார். இதேபோல, பல்வேறு நிர்வாகிகள் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில், உயர்நிதிமன்ற உத்தரவுப்படி சிறு, குறு விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக ரூ. 10.ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் வசூல் செய்வதை ஒராண்டிற்கு தள்ளிவைக்க வேண்டும். ஏழைமக்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். நூறுநாள் வேலையை விவசாயத்திற்கு பயன்படுத்திட உத்தரவிட வேண்டும். கரோனாவை தடுத்திட கிராமங்கள் உட்பட எல்லா இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

பூ, பழம், காய்கறி உள்ளிட்ட விவசாயம் பாதிக்கபட்டவைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்ட நிவாரணதொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Top