logo
2020 - நீட் தேர்வில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி இமாலய சாதனை

2020 - நீட் தேர்வில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி இமாலய சாதனை

26/Oct/2020 10:39:15

புதுக்கோட்டை:   2020 - ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன்  பள்ளி மாணவர்கள் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து, அப்பள்ளியின் முதுநிலை முதல்வரும், இயக்குநருமான ஜெ. ஜோனத்தன் தெரிவித்த தகவல்: 2020 - நீட் தேர்வில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி மாணவ, மாணவிகள் இமாலய சாதனை படைத்துள்ளனர்

ஆ. பெமினாபாத்திமா நீட் தேர்வில் 720 -க்கு 680 மதிப்பெண்கள் பெற்று 99.94 % விழுக்காடுடன் மாநிலஅளவில் 7-ஆவது இடத்தையும் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 693 -ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். நிக்குல் அர்ஜுன் 720-க்கு 665  மதிப்பெண்கள் பெற்று 99.86  %  விழுக்காடுடன் இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1758 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளார;.

பின்வரும் மாணவர்கள் தங்களின் வரலாற்றுப் பயணத்தோடு சிறந்தமருத்துவக் கல்லூரிகளில் கால் பதிக்கவிருக்கிறார் கள்- ஹானுல் பரிகா 720-க்கு567. முத்துகுகன் 720-க்கு558.  ரிக்கிபிரான்சிஸ் 720-க்கு 537. தருன் 720-க்கு 492. சையதுசுல்தான் சைமர் அப்துல்லா 720-க்கு 481.  கௌசிக் 720-க்கு 461 மற்றும்  நர்மிதா 720-க்கு 448. 

மௌண்ட் சீயோன் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் மட்டுமல்லாது IIT, JEE தேர்விலும் சாதனைபடைத்துள்ளனர் கடந்த வருடத் தேர்வில், சாலைபிரகதிஸ்வரன் 99.05 %.  லட்சுமிநாராயணா 96.31 % விழுக்காடும் இவ்வருடத்தில் மாணவன்   

சுதர்சன் 95.89 % . விழுக்காடு பெற்று சாதனைப் படைத்துள்ளார். 

சாதனை படைத்த மாணவர்களை மௌண்ட் சீயோன் முதுநிலை முதல்வரும்,மௌண்ட் சீயோன்  பள்ளிகளின் இயக்குநருமான டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், பள்ளியின் ஒருங்கிணைப்பாளரும், இணை இயக்குநருமான ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வர் ஜலஜாகுமாரி, பயிற்சியாளர்  சுரேஷ் கண்ணா,ஒருங்கிணைப்பாளர்  குமரேஷ் மற்றும் ஆசிரியர் குழும உறுப்பினர்கள் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.


Top