logo
பழங்குடியின மக்களுக்காக 10 ஆண்டுகளில் 100 இலவச மருத்துவ முகாம்கள்: ஈரோடு தொழிலதிபரின் தொண்டுள்ளம்

பழங்குடியின மக்களுக்காக 10 ஆண்டுகளில் 100 இலவச மருத்துவ முகாம்கள்: ஈரோடு தொழிலதிபரின் தொண்டுள்ளம்

26/Oct/2020 04:51:06

ஈரோடு: சமவெளிப் பகுதியோடு அவ்வளவாக தொடர்பு இல்லாத மலைக் கிராமங்களில், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 100 இலவச மருத்துவ முகாம்களை நடத்தி பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருகிறார் ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் எஸ்.சிவானந்தன். 

இந்தியா முழுவதும் பல ஆயிரம் பழங்குடியின கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் பல இன்று வரை வெளியுலகுடன் தொடர்பற்ற நிலையில்தான் இருக்கிறது. அதாவது அந்த ஊர்களுக்குச் செல்ல சாலை வசதி இருக்காது. அடிப்படை வசதிகள் இருக்காது. கல்வி, மருத்துவம் போன்றவை அங்குள்ள மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். ஒருசில பழங்குடியின கிராமங்களில் தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அரசும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.

 நகரங்களில் இப்போதெல்லாம் மளிகைக் கடையைவிட மருந்துக் கடைகள் அதிகமாகத் தென்படுகின்றன. தெருவுக்குத் தெரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் வானுயர ஓங்கி நிற்கின்றன. ஆனால் பழங்குடியின கிராமங்களில் மக்களுக்கான மருத்துவ சிகிச்சை என்பது எட்டாத தொலைவில்தான் உள்ளது.

இந்தச் சூழலில், மலைக் கிராமங்களைத் தேடிப்பிடித்து மருத்துவ சேவை வழங்கி வருகிறார், ஈரோட்டை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலதிபர் எஸ். சிவானந்தன். ஈரோடு டிரஸ்ட் மருத்துமனையின் செயலாளராகவும் உள்ள இவர், இந்த சேவையை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார்.

இது பற்றி  எஸ். சிவானந்தன் கூறியதாவது: என்னுடைய தொழில் ஜவுளி சார்ந்தது. இருப்பினும் மலைப்பயணம் என்றால் எனக்கு அலாதி பிரியம். இதனால் கடந்த 1980 -ஆம் ஆண்டு முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் மலைக்  கிராமங்களுக்கு அடிக்கடி சென்று வருவேன். அப்போது மருத்துவத்துக்காக மலைக் கிராம மக்கள் படும் சிரமத்தை நேரில் பார்த்துள்ளேன்.

மருத்துவம் மிகப் பெரிய வியாபாரமாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக்  காலகட்டத்தில் பழங்குடி கிராம மக்களுக்கான சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டது. பொருளாதார சூழல் காரணமாக மலைக் கிராம மக்கள் மருத்துவமனைகளை நோக்கி வரத் தயங்குகின்றனர் என்றார் அவர்.

.

Top