logo
அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம் வைக்கக்கோரி பாஜகவினர் மனு

அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம் வைக்கக்கோரி பாஜகவினர் மனு

23/Oct/2020 08:51:33

புதுக்கோட்டை:  அரசு அலுவலகங்களில் பாரத பிரதமரின் புகைப்படம் வைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று(அக்.23) மீண்டும் பாரதீய ஜனதா கட்சி பிரமுகர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் ஒன்றிய. ஊராட்சி. பஞ்சாயத்து அலுவலங்களில் பிரதமர்  நரேந்திர மோடியின்  புகைப்படம் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஏற்கெனவே அழைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் கோரிக்கை மனு கொடுத்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர் 

பாரத பிரதமர் புகைப்பட வைப்பதற்கு 2006 -ஆம் ஆண்டு அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அதனை தமிழக அரசும் தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளும் கடைபிடிப்பதில்லை என்று கூறிய பாஜக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை  பிரேம் செய்து கையில் எடுத்து வந்து வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணியின் முன் திரண்டு கோரிக்கை வைத்தனர் 

அதன்பின்னர், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு செயலாளர் சீனிவாசன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, பாஜகவினர் க஬றுகையில், ஏற்கெனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்கண்ட பிரச்சினைக்காக கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய பாஜக பிரமுகர்கள் நாளைக்குள் இந்த மனு மீது தக்க நடவடிக்கை எடுத்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமரின் படம் வைக்கப்பட வில்லை என்றால் சாலை மறியல் முற்றுகை போராட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் என புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் முன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர் இதனால் வரும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது 


Top