logo
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்

21/May/2021 10:32:20

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்திசிதம்பரம் வழங்கினார்.

 புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த எம்பி-கார்த்தி சிதம்பரம், அங்கு கொரோனா சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதியிடம்  கேட்டறிந்தார். பின்னர் தான் ஒரு பெட்டியில் கொண்டு வந்திருந்த மருத்துவ உபகரணங்களை  மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்மோகனிடம்  வழங்கினார்.

இதில், திருமயம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ- ராமசுப்புராம்புதுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் .எம்.எஸ். இப்ராஹிம்பாபு, அரிமளம் முகமதுஇப்ராஹிம், பொன்னமராவதி பொறியாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top