logo
தமிழகம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு.

தமிழகம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு.

22/Oct/2020 01:03:03

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  சென்னையில் இருந்து விமானம் மூலம்  வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

 அங்கிருந்து, கார் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள  ஐடிசி நிறுவனத்தில் தமிழக சுகாதாரத்தறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், அந்த நிறுவனத்தில்ரூ.100 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

  இவ்விழாவில் அவர் பேசியது: விராலிமலையிலுள்ள ஐடிசி தொழிற்சாலையானது தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க ரூ.100 கோடியில் மாவு தயாரிக்கும் ஆலையை விரிவாக்கம் செய்துள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடியாக 2,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. என்றார். இதைத்தொடர்ந்து, ஐடிசி தொழிற்சாலையை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார்இதைத்தொடர்ந்து, விராலிமலை இலுப்பூர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த காளைமாட்டு உருவச்சிலையை திறந்து வைத்து முதல்வர் பேசுகையில், புதுக்கோட்டை வீரம் விளைந்த மண். தமிழத்திலேயே ஜல்லிக்கட்டு அதிகம் நடைபெறக்கூடிய மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இங்கு ஏறத்தாழ 120 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக புதுக்கோட்டை மண்ணின் மைந்தர் அன்புச்சகோதரர் சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதை நிரூபிக்கும் வகையிலும் இந்த உலகுக்கு உணர்த்தும் வகையிலும் மிகவும் நேர்த்தியாக இந்த ஜல்லிக்கட்டுக் காளையை ஒரு இளைஞர் அடக்கும் உருவச்சிலை அவர் வடிவமைத்து இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

 இதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு பெரியகண்மாய்யில் ரூ. 61 லட்சத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.அங்கிருந்து, .புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கெரோனா தடுப்பு களப்பணிகள், மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், நீர் மேலாண்மைத் திட்ட பணிகள், வேளாண்மைத் துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்புதுக்கோட்டைக்கு முதல்வர் வருகையையொட்டி திருச்சி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பொதுப்பணித்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர்  நிகழ்வில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள், காவல்துறை, ஊடகத்துறையினருக்கு கொரோனா பரிசதோனை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.                                                                              

Top