logo
அரசு உத்தரவால் ஈரோடு மாநகர் பகுதிகளில் உள்ல 3 ஆயிரம் சதுர கொண்ட  ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு

அரசு உத்தரவால் ஈரோடு மாநகர் பகுதிகளில் உள்ல 3 ஆயிரம் சதுர கொண்ட ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு

29/Apr/2021 09:10:51

ஈரோடு, ஏப்: 3 ஆயிரம் சதுரஅடி கடைகளை மூட உத்தரவிட்டதன் காரணமாக  ஈரோடு மாநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஜவுளி மற்றும்  நகைக்கடைகள் அடைக்கப்பட்டன.

 தமிழகத்தில் கொரோனா 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஓரு இடங்களில் கூடுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள், பெரிய மால்கள் மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து,  3000 சதுரஅடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இந்த நடைமுறை புதன்கிழமை  அமலுக்கு வந்தது. அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 3000 சதுர அடிக்கு மேலுள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள் நகைக் கடைகள் ஆகியவை மூட வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

 ஈரோடு மாநகரை பொறுத்தவரை ஆர்.கே.வி. சாலையில் உள்ள  நூற்றுக்கும் மேற்பட்ட  பெரிய ஜவுளிக் கடைகள், நகைக்கடைகளில் 3 ஆயிரம் சதுரஅடிக்கு மேலாக பரப்பளவில் உள்ள கடைகளை   மூட உத்தரவிட்டனர்.

இதைப்போல் மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டனஇதனால் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி உள்பட  ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெரிய கடைகளும் அடைக்கப்பட்டன

Top