logo
99 அடியில்  தொடர்ந்து இருக்கும் பவானிசாகர் அணை

99 அடியில் தொடர்ந்து இருக்கும் பவானிசாகர் அணை

20/Oct/2020 10:01:57


ஈரோடு மாவட்ட மக்களின்  குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணையாகும். 105  கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின்  முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக  நீலகிரி மலைப் பகுதி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. 

இந்நிலையில், நேற்று முதல் மழைப்பொழிவு குறைந்ததால் தொடர்ந்து  அணைக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 99.13 அடியாக உள்ளது. அணைக்கு 1,860 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து  தடப்பள்ளி அரக்கன்கோட்டை  பாசனத்திற்காக 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Top