logo
ஈரோட்டில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

19/Oct/2020 10:55:55

ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் இன்று(19.10.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு, புரட்சிகர இளைஞர் முன்னணி ஜெயப்பிரகாசம் தலைமை வகித்தார். திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம்,  மக்கள் சிவில் உரிமைக் கழகம் மாநில தலைவர் கண. குறிஞ்சி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் சித்திக் மாவட்ட செயலாளர் சலீம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி, திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் விவசாயிகளின் வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ரயில்வே விமான போக்குவரத்து என பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


Top