logo
குறைந்த மின்அழுத்த பாதிப்பு:  வேறு துணை மின் நிலையத்துக்கு இணைப்பை மாற்றித்தர விவசாயிகள் கோரி

குறைந்த மின்அழுத்த பாதிப்பு: வேறு துணை மின் நிலையத்துக்கு இணைப்பை மாற்றித்தர விவசாயிகள் கோரி

19/Oct/2020 05:40:31

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம், அரையப்பட்டி கிராமப் பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வேளாண், வீட்டு மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, மீண்டும் பாச்சிக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்தே மின் வினியோகத்தை மாற்றித்தர அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த அரையப்பட்டி, வன்னியன்விடுதி, வெள்ளக்கொல்லை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆலங்குடி மின்வாரிய செயற்பொறியாளரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:

மேற்படி எங்கள் கிராமங்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக பாச்சிக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோம் நடைபெற்று வந்தது. அப்பொழுதெல்லாம் எப்போதாவது ஏற்படும் சிறு, சிறு தடங்கலைத் தவிர மின் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதில்லை. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்து பாச்சிக்கோட்டைக்குப் பதிலாக வடகாடு துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெற்று வருகிறது.

வடகாடு துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெற்ற நாளிலி லிருந்து விவசாயிகள், சிறு தொழில் நிறுவனங்கள் வைத்திருப்போர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுவரை 50-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் முறையற்ற மின் விநியோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன.

வீடுகளில் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் பழுதடையும் அவலம் தொடர்கிறது. இதனால், எங்கள் பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

எனவே, எங்கள் பகுதிகளுக்கு ஏற்கெனவே இருந்தபடி பாச்சிக்கோட்டை துணை மின்நிலையத்திலிருந்தே மின் விநியோகத்தை மாற்றித்தர வேண்டுகிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு கொடுக்கச் சென்ற குழுவில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப்பெருந்தலை வர் எஸ்.ஆர்.வடிவேல், ஊராட்சி மன்றத் தலைவா; துரை.மலர்விழி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலர் சு.மதியழகன், வழக்கு ரைஞர் ராமச்சந்திரன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் விஜயா சின்னத்துரை, கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் சிவசங்கரன் உள்பட திரளானோர்  பங்கேற்றனர்.


Top