logo
காவிரி -வைகை குண்டாறு இணைப்புத்திட்டத்திற்கு தை மாதம் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்:   அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்.

காவிரி -வைகை குண்டாறு இணைப்புத்திட்டத்திற்கு தை மாதம் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்.

18/Oct/2020 06:56:51

 புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கு  இன்று (18.10.2020) நாட்டு விழாவில் பங்கேற்ற  அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.



மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில்  கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்

பா.ஆறுமுகம் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்த்தியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மேலும் பேசியதாவது:  


பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த

திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் 11,000 ச.அ. பரப்பளவுள்ள இடத்தில் மூன்று தளங்களுடன் 12 வகுப்பறைகள், குடிநீh; வசதி, 2 கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளை விட மிகச் சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு பொதுமக்கள் பிறமாவட்டங் களுக்கு சென்ற நிலை மாறி பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பொது மக்கள் வரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் பல ஆண்டு கால கனவுத்திட்டம் காவிரி-வைகை குண்டாறு இணைப்பு திட்டம் ஆகும். இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுடன் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு , தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற தை மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இத்திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடக்கி வைக்கவுள்ளார்.

இத்திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது விவசாயம் செழித்து நிலத்தடி நீர் மட்டம் உயருவதுடன் விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்பாடு அடையும். பல தலைமுறைகள் பயன்பெரும் மகத்தான திட்டம் காவிரி-வைகை குண்டாறுஇணைப்பு திட்டம் என்றால் அது மிகையாகாது என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா; விஜயலெட்சுமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Top