logo
 இளைஞர்களுக்கு முகக்கவசம் அளித்து  விழிப்புணர்வை வலியுறுத்திய போலீஸார்

இளைஞர்களுக்கு முகக்கவசம் அளித்து விழிப்புணர்வை வலியுறுத்திய போலீஸார்

15/Oct/2020 11:00:30

புதுக்கோட்டையில் முகக்கவசம் அணியாமல் வந்த இளைஞர்களைப் பிடித்து இலவசமாக முக கவசம்  வழங்கி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து விழிப்புணர்வை காவல்துறையினர் இன்று ஏற்படுத்தினர்.

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தற்போது அதிகரித்து வரும் வேளையில் தமிழக அரசு பல்வேறு  தளர்வுகள் களை அறிவித்துள்ளதால் இதனால் அதிக அளவில் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக பல்வேறு இடங்களிலும் சுற்றித் திரிகின்றனர்.

ஒரு சிலர் நோய்த்தொற்றை பற்றி கவலைப்படாமல் முகக் கவசங்கள் அணியாமல்  வாகனங்களில் செல்கின்றனர் அப்படி செல்லும் வாகன ஓட்டிகளை  பிடித்து காவல்துறையினர் அபதாரம் வழங்கி இலவசமாக முகக் கவசம் வழங்கியும் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கண்டிப்பாக கொரோன பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை புதுக்கோட்டை நகர காவல்துறை மற்றும் நகராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 இச்சூழ்நிலையில், இன்று புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட நகர உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டபோது முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோரைப் பிடித்து அவர்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கியும் வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும் நகர உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் முகக் கவசங்களை தானே அவர்கள் முகத்தில் அணிவித்து கொரோன வைரஸ் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளச்செய்தார்.

 இதே போல் உங்கள் ஊர்களில் உள்ள பொதுமக்களுக்கும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என  இளைஞர்களை உறுதிமொழி எடுக்க வைத்து  அனுப்பி வைத்தார்.

 தற்போது காவல்துறை மூலம் அதிக அளவில் அபதாரம் விதித்து வரும் நிலையில் நகர உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் இந்த செயல் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றது அதேபோல் அரசு பேருந்தில் வந்த பொது மக்களுக்கும் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

 

Top