logo
தெட்சிணாமூர்த்தியை வழிபட வியாழக்கிழமை உகந்த நாள்

தெட்சிணாமூர்த்தியை வழிபட வியாழக்கிழமை உகந்த நாள்

15/Oct/2020 12:23:34

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டத்தில் உள்ள திருப்புனவாசல்  விருத்தபுரீஸ்வரர்  கோயில் திருத்தலத்தில் தென் கோஷ்ட மூர்த்தியான தட்சிணாமூர்த்தி வித்தியாச கோலத்தில் அமர்ந்துள்ளார். வலது மேல் கரத்தில் அட்ச மாலையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, கீழ் வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் தொடை மீது ஊன்றியும் காட்சியளிக்கிறார்.                                                 

தட்சிணாமூர்த்தி என்பது சிவாம்சம். சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக, ஞானகுருவாக, சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளினார் என்கிறார் என்கிறது புராணம். கல்லால மரத்தடியில் அமர்ந்து கொண்டு, சனகாதி முனிவர்களுக்கு, சின் முத்திரை காட்டியபடி ஞானோபதேசம் அருளும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் தரிசித்து, அவருக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்வார் என்பது ஐதீகம்.

அனைத்து சிவாலயங்களிலும் கோஷ்டத்தில், தென்முகக் கடவுளாக, கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். வியாழக்கிழமையில், மத்யாஷ்டமி சேர்ந்த நன்னாளில், தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். தனம் தானியம் தந்து, கல்வியையும் கலைகளையும் தந்து செம்மையாக வாழச் செய்வார் குரு தட்சிணாமூர்த்தி.

குரு பிரகஸ்பதி. இவர்தான் நவக்கிரகங்களில் குரு பகவானாகத் திகழ்கிறார். தேவர்களின் குரு பிரகஸ்பதிதான். சிவனருளால், நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, குரு கிரகமாக இருக்கும் வரத்தைப் பெற்றார் என்கிறது புராணம்.

சிவாலயங்களிலும் அம்மன் கோயில்களிலும் முருகன் கோயில்களிலும் நவக்கிரக சந்நிதி அமைந்திருக்கும். வியாழக்கிழமைகளில், நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். நவக்கிரக குருவுக்கு விளக்கேற்றி பிரார்த்தனை செய்யலாம்.

 

Top