logo
பொது அம்சங்கள், மாவட்ட பிரச்னைகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்- திமுக தலைமை அறிவிப்பு

பொது அம்சங்கள், மாவட்ட பிரச்னைகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்- திமுக தலைமை அறிவிப்பு

14/Oct/2020 01:44:34

சென்னை: 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

அந்தவகையில், திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் ஆ ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர் ராமசாமி உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். வரும் ஜனவரி மாதம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி முதல் வார இறுதி தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் மாவட்ட பிரச்னைகள் குறித்தும் இடம்பெறவேண்டிய சாரம்சங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சித்தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம். அத்துடன் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க விரும்புவோர், manifesto2021@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.        


Top