logo
திமுக கூட்டணியில் எந்தவித உரசலும் இல்லை: திமுக செய்தித்தொடர்பாளர் பி.டி.அரசகுமார் பேட்டி

திமுக கூட்டணியில் எந்தவித உரசலும் இல்லை: திமுக செய்தித்தொடர்பாளர் பி.டி.அரசகுமார் பேட்டி

12/Oct/2020 02:46:46

புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் மாநில திமுக தலைமை செய்தித் தொடர்பு செயலாளராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக புதுக்கோட்டைக்கு வந்த  பி.டி.அரசகுமாருக்கு  திமுக சார்பில் இன்று(12.10.2020) வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது: வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகளவில் முதலீடுகள் செய்து உள்ளது என தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பபட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்நிய தொழில் முதலீடுகள் எவ்வளவு ஈர்க்கப்பட்டது, எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்தீர்கள் என்றெல்லாம் திமுக தலைவர்  வெள்ளையறிக்கை கேட்டதற்கு இன்று வரை அதற்கான பதிலை எடப்பாடி அரசு தரவில்லை. அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளது.

 தமிழகத்தில் நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவி கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோயை ஒழிக்க இந்த அரசு எந்தவித முயற்சியும் செய்யவில்லை. ஆனால், நோய்த்தொற்று கட்டுக்குள் இருப்பதாகக்கூறி உண்மை நிலவரத்தை மூடிமறைக்க அரசு முயற்சி செய்கிறது.

  திமுக கூட்டணி மிகவும் பலமாக இருக்கிறது அதில் எந்தவித உரசலும் இல்லை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்தெந்த சின்னத்தில் போட்டியிடும் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார்நான் தேசியக் கட்சியிலிருந்து திராவிட கட்சிகள் வரவில்லை திராவிட கட்சியில் இருந்து சில காலம் தேசிய கட்சியில் இருந்தேன். தற்போது  தாய் வீடான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளேன்.

  திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவரவர் திறமைக்கு ஏற்ப யார் யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என்பது  கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு தெரியும். அவரவருக்குரிய தகுதிக்கேற்ப பதவியை தலைவர்கள் கொடுத்துள்ளார்கள் ஆகவே மாற்றுக் கட்சியில் வந்தவர்களுக்கு உயர்பதவி என்ற கருத்துக்கு இங்கு இடமில்லை.

  காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது பற்றி கருத்து கேட்டதற்கு குஷ்புவுக்கு தமிழக மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் என்ன மாதிரியான ஆதரவு இருந்தது என்பது அனைவருக்கும்  தெரியும்.   பாரதிய ஜனதா கட்சியில் இருந்தாலும் இருக்கின்றேன் என்று பிம்பம் காட்டினாலும் தெருவில் இறங்கி குதித்தாலும் திமுகதான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

 இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர், திருமயம் எம்எல்ஏ. எஸ். ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.பாலு, எஸ். மதியழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Top