logo
பள்ளிகளைத் திறப்பதில் நீடிக்கும் தாமதத்தால்... மாணவர்கள் கல்வியை மறக்கும் அபாயம்..

பள்ளிகளைத் திறப்பதில் நீடிக்கும் தாமதத்தால்... மாணவர்கள் கல்வியை மறக்கும் அபாயம்..

12/Oct/2020 11:01:10

by R.MOHANRAM: கொரானா வைரஸ்  பாதிப்பை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு இப்போது இல்லை என்ற அறிவிப்பு பொது வெளியில் வரவேற்பைப் பெற்றிருக்கும் அதே வேளையில், இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையாகப் பார்க்கப்படும் மாணவர் சமுதாயம் பாதிக்கப்பட்டிருப்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டியதும் கட்டாயம்.

கல்வியில் கேரளத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து அனைத்து கல்வி நிறுவனங்களுமே மூடப்பட்டன.

மாணவர்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டு ஏறத்தாழ 7 மாதங்கள் கடந்து விட்டன. பல தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் தங்களின் தேவைகளையும், மாணவர்களின் கல்வி பாதிப்பையும் கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்தினாலும் அந்த நடைமுறை நகர்புறங்களைச் சார்ந்த சுமார் 40 % மாணவர்களை மட்டுமே போய்ச் சேர்ந்திருக்கிறது.

  ஆன்லைன் கல்விக்கான எவ்வித அடிப்படைக் கட்டமைப்பும் இல்லாத, கிடைக்காத  கிராமப்புறங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருக்கிறது. வீணாகிப்போன அவர்களது எதிர்காலத்தை மீட்டெடுப்பது என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என  அனைவருக்கும் சவாலான பணியாகிவிடுமோ என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

 மாணவர்கள்- கல்வி நிலையங்களுக்கு இடையிலான தொடர்பை இனியும் காலம் தாழ்த்தாமல் ஏற்படுத்த வேண்டியது அவசர அவசியமும் ஆகும்காரணம் மாணவர்களின் எதிர்காலம் நொடிக்கு நொடி மணிக்கு மணி நாளுக்குநாள் மாதங்களுக்கு மாதம்  வீணாகிக் கொண்டிருக்கிறது கண்கூடு. இது ஆண்டுக்கணக்காக மாறிவிடக்கூடாது என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

எனவே, மாணவர்களின் நலன் கருதி  பள்ளிகளில்  ஒவ்வொரு வகுப்புக்கு ஒருநாள் பாடம் எடுக்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுக்க முன் வரவேண்டும். அப்படி செய்யும் போது வாரத்துக்கு ஒரு முறையாவது அவர்கள் பள்ளி வகுப்பறைக்கு வந்து செல்ல முடியும்.கல்வி தொடர்பில் இருப்பார்கள்.   மேலும், சமூக இடைவெளி, நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை எளிதாகக் கண்காணித்து கட்டுப்படுத்த முடியும்.

இல்லையெனில் படிப்பை மறந்துவிட்டு திசை மாறி கிடைக்கும் வேலைக்கு மாணவர்கள் செல்லும் அவலம் அரங்கேறும். இவர்களை  மீண்டும் கல்வி பயில பள்ளிக்கு திருப்புவது  மிகவும் கடினமாக இருக்கும். 70  ஆண்டு காலம் கல்வி முன்னேற்றம் குறித்து அப்துல்கலாம், டாக்டர் ராதாகிருஷ்ணன், அம்பேத்கர் போன்ற சான்றோர்கள்  கண்ட கனவெல்லாம் நனவாகாமல் போய்விடும்.

ஏனெனில், இளம் வயதில் குழந்தைத்தொழிலாளியாக மாறி பொருளீட்டல் என்ற ருசியை சுவைக்கும் மாணவர்களையும், அதை நுகரும் அவர்களது குடும்பத்தையும் மீட்டெடுப்பது என்பது மிகவும் கடினமாகப் போய்விடும். கல்வி பயில கல்வி நிலையங்களுக்கு வரமாட்டார்கள்மூடிக்கிடக்கும் பள்ளிகளில்  அடிப்படை கட்டமைப்புகளும் சீரழிந்து கொண்டு இருக்கிறதுஅரசுப்பள்ளிகளில் தினக்கூலிகளாக பணியாற்றுவோரும் சுயநிதி, தனியார் கல்வி நிலையங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் மாற்றுப்பணிளுக்கு  செல்வதை பரவலாகக் காணமுடிகிறது.

 குழந்தைகளுக்கு  இனி குழந்தைகள் அடிப்படைக் கல்வியையும் பாடங்களையும் சுத்தமாக மறந்துவிட்டார்கள் என்று ஆதங்கப்படுகிறார் ஒரு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை. கல்லூரி மாணவ மாணவிகளின் நிலையும் அப்படித்தான் பல்வேறு .வேலைக்கு செல்கின்றனர்வருகின்ற தீபாவளி பண்டிகைக்காக  அவர்களை பணியமர்த்திக் கொள்ள பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

 கொரோனா பொதுமுடக்கம் என்பது பல்வேறு தளர்வுகளை அறிவித்தபடி கிட்டத்தட்ட  பொது முடக்கம் முடிவுக்கு வந்து விட்டதோ என்ற எண்ணத்தை பொதுவெளியில் பார்க்கும் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றனகடைவீதிகளில் பல பெற்றோர்கள் முகக் கவசம் அணியாமலேயே குழந்தைகளை அழைத்துக்கொண்டு  போய்க் கொண்டிருக்கிறார்கள்கட்டுப்பாடற்ற தளர்வுகள் உள்ளபோதுதங்களது வீட்டிலே எந்தனை நாட்களுக்கு அடைந்து கிடக்கமுடியும்அவர்கள் மீது எந்தக்குற்றமும் சுமத்த முடியாது.

பள்ளிகளை மட்டும் ஏன் பூட்டிவைக்க வேண்டும்  என்பதுதான் நம் அனைவரின் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி ?.

 இது குறித்துபுதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் அஸ்ரப்அன்சாரி, செயலாளர் முத்துக்கருப்பன்,பொருளாளர் மேசியாசந்தோசம், ஒருங்கிணைப்பாளர் ரமணன் ஆகியோர் கூறியது:

 கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் சூழ்நிலையில் பள்ளிகளின் திறப்பை விட மாணவர்களின் உயிர் முக்கியம் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.ஆனால், மாணவர்களின் எதிர்கால நலனைக் கவனத்தில் கொண்டு, இந்தக் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் வேதனைக்குரிய நிலையை மாற்றும் வகையில்பள்ளிகளை பூட்டி வைத்திருப்பதைக் கைவிட்டு  கல்வியிலும் அக்கறைகொண்ட இந்த அரசு படிப்படியாக பள்ளிகளைத் திறப்பது பற்றி தாமதமின்றி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

 

Top