logo
காவல்துறைக்கு உதவும் வகையில் மக்கள் பாதுகாப்பு சேனை உருவாக்க முடிவு

காவல்துறைக்கு உதவும் வகையில் மக்கள் பாதுகாப்பு சேனை உருவாக்க முடிவு

11/Oct/2020 11:09:25

புதுக்கோட்டை: இதுகுறித்து,  அகில இந்திய மகாத்மா காந்தி பேரவை நிறுவனர் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் நடக்கும் குற்றங்களை காவல்துறை மட்டுமே தடுத்துவிட முடியாது. பொதுமக்களும் காவல்துறைக்கும் அரசுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டியது அவசியமாகும். குறிப்பாக வரும்முன் காப்பதே சிறந்த வழிமுறயாகும்.அந்த வகையில் வியாபரம் என்ற போர்வையில் பிற மாநில குற்றவாளிகள் உள்ளூர் குற்றவாளிகளின் வழிகாட்டுதலுடன் குற்றச்செயல்களில் இறங்கியுள்ளனர்.

அவர்களை கண்காணிக்க வேண்டியது பொதுமக்களின் பொறுப்பு. சந்தேகிக்கப்படும் நபர்களை காவல்துறையினருக்கு தெரியப்படுத்தவும். காவல்துறைக்கு உதவும் வகையில் இதற்கென்று மக்கள் பாதுகாப்பு சேனையை உருவாக்க காந்திப் பேரவை திட்டமிட்டுள்ளது.

பொதுநலனில் அக்கரையுள்ள இளைஞர்கள், பொதுமக்கள் இணைய அன்புடன் அழைக்கிறோம்.முதற்கட்டமாக புதுக்கோட்டை நகரத்தில் 42  வார்டுகளில்  நகர சேனையும், பின்பு கிராமங்கள் தோறும் கிராம சேனையும் அமைக்க திட்டமிட்டுள்ளோம். மண்ணின் மைந்தர்களாகிய நாம் அனைவரும்  மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய  ஒன்றிணைவோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.  


Top