logo
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை  ஜாதி பார்த்து அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது: கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஜாதி பார்த்து அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது: கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டி

11/Oct/2020 11:02:12

அரிமளம்:   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை  ஜாதியை காரணமாக வைத்து அவமானப்படுத்துவது  வன்மையாக கண்டிக்கத்தக்கது இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசியல் கட்சிகள் அவர்களை தங்களது கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.

காங்கிரஸ் எம்பி விழாவை புறக்கணித்த திமுக எம்எல்ஏ:

சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை மாவட்டம, அரிமளத்தில்  சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்து பேசுகையில், மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை நிறுத்தி விட்டது சென்ற ஆண்டுக்கான  உறுப்பினர் நிதியிலிருந்து  இந்த உயர் கோபுர மின்விளக்கு அமைத்துள்ளேன். இனி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து எந்த ஒரு பணியையும் என்னால் செய்ய முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம்  கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: இந்தியாவின் சாபக்கேடு ஜாதி ஜாதியை காரணமாக வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் அவமானப் படுத்துவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழக அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த சம்பவங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.அரசியல் கட்சிகள் துணிச்சலோடு இந்த சம்பவங்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அவர்களை தங்களது கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

திமுக கூட்டணியில்தான் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளது: 

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவார்.மந்திரி சபையில் காங்கிரஸ் இடம்பெறுவது குறித்து தற்போதைக்கு கூற முடியாது தேர்தல் முடிவுக்குப் பிறகு தான் இது குறித்து பதில் கூற முடியும் என்றார்.

திமுக எம்எல்ஏ ரகுபதி  விழாவை புறக்கணித்ததால்  அதிர்ந்து போன கார்த்தி சிதம்பரம்:

கடந்த வருடம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து அதிமுக உறுப்பினர் தலைவராக தேர்ந்தெடுக்க சம்பவத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை திமுக தலைவர் மு,க. ஸ்டாலின் தலையிட்டு தீர்த்து வைத்திருந்தாலும், புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் இடையே நீரு பூத்த நெருப்பாக மோதல் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக திமுக ஏற்பாடு செய்யும் கூட்டணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்வது கிடையாது. அதே போல காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் ஆர்ப்பாட்டத்தில் திமுக கலந்து கொள்ளவது கிடையாது என்ற நிலைதான்  இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று(அக்.11) நடந்த விழாவில் திருமயம் தொகுதியின் திமுக எம்எல்ஏ ரகுபதியின் பெயரை விழா பதாகையில் குறிப்பிட்டிருந்த போதிலும் அவர் விழாவை புறக்கணித்தார்.

கார்த்தி சிதம்பரம் விழாவிற்கு வந்த போது எங்கே எம்எல்ஏ என்று கேட்டார். அதற்கு நிர்வாகிகள் முறையான பதில் கூறவில்லை. நான் வந்திருப்பதாக கூறினீர்களா என்று அவர்களிடம் கார்த்தி சிதம்பரம் கேட்டபோது, நாங்கள் தகவலை தெரிவித்து விட்டோம் என்று நிர்வாகிகள் கூறினர். இதனால்  வெறுத்துப்போன கார்த்தி சிதம்பரம் இந்த பிரச்னையை அப்புறமாக பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய பிறகு, உயர்மின் கோபுரத்தை திறந்து வைத்தார்.  மேலும், கூட்டத்தில் நிர்வாகிகளால் எழுந்த சலசலப்பை கார்த்திக் சிதம்பரம் சமாதானப்படுத்தினார். 


Top