logo
பராமரிப்பு பணிக்காக  சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரெயில் நேரம் மாற்றம்

பராமரிப்பு பணிக்காக சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரெயில் நேரம் மாற்றம்

11/Oct/2020 04:20:34

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பராமரிப்பு பணி காரணமாக நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 14-ஆம் தேதியில் பின்வரும் சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-கோவை (வண்டி எண்: 02679) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் நாளை மற்றும் 14-ஆம்  தேதி மதியம் 2.30 மணிக்கு பதிலாக, மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.  மறுமார்க்கமாக கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02676) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் நாளை மற்றும் 14-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு பதிலாக மதியம் 3.35 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனஅதில் கூறப்பட்டுள்ளது.

 


Top