logo
காவிரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக முதல்வர்கள் மாநாட்டை நடத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

காவிரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக முதல்வர்கள் மாநாட்டை நடத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

11/Oct/2020 03:51:20

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. காவிரி - கோதாவரி இணைப்புக்கான விரிவான வரைவு திட்ட அறிக்கை ஓராண்டுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டது.

இத்திட்டத்தில் பயன் பெறும் மாநிலங்கள் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து விட்டால், அதை இறுதி செய்து, திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். ஆனால், ஓராண்டில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த நகர்வும் இல்லை.

எனவே, இணைப்புத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக மராட்டியம், சத்தீடீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

அந்த மாநாட்டில் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்தக்கட்ட பணிகளை நோக்கி நகர வேண்டும். அடுத்த ஓராண்டுக்குள்ளாகவாவது காவிரி - கோதாவரி ஆறுகள் இணைப்புத் திட்டப் பணிகள் தொடங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.


Top