logo
காவலர்கள் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி  கடன் மோசடி செயதாக புகார்

காவலர்கள் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி கடன் மோசடி செயதாக புகார்

11/Oct/2020 12:54:31

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் கந்தசாமி. கடந்த சில நாட்களாக அவரது புகைப்படத்துடன் கூடிய முகநூல் பக்கத்தில் இவர் கடனாக பணம் கேட்பது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 அதில், கூகுள் பே, போன்பே போன்ற  கணக்குகளில் தனக்கு பணம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்து உதவி ஆய்வாளர் கந்தசாமியிடம் அவரது நண்பர்கள்  தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது நண்பர்களின் முகநூல் பக்கத்தில் சென்று பார்த்தபோது தனது புகைப்படத்துடன் கூடிய போலி முகநூல் பக்கத்தில் தனக்கு கடனாகப் பணம் கேட்டது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தார். 

மேலும், இதுபற்றி தகவல் அறிந்த சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள போலீஸாரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனிடையே காவலர்கள் பெயரில் போலி முகநூல் கணக்குகள் தொடங்கி அதில் கடன் கேட்பதால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீஸார் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் 


Top