logo
செல்போன் டேட்டா திட்டத்தில்  பி.எஸ்.என்.எல். சலுகை அறிவிப்பு

செல்போன் டேட்டா திட்டத்தில் பி.எஸ்.என்.எல். சலுகை அறிவிப்பு

10/Oct/2020 12:56:47

தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கிலி , அனைத்து இணைய தள செல்போன் டேட்டா திட்டங்களிலும் 25 சதவீதம் கூடுதல் சலுகை வழங்குவதாக பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி மாதமாக இந்த மாதம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, அனைத்து செல்லிடப்பேசி போன் டேட்டா திட்டங்களிலும் 25 சதவீதம் வரை கூடுதலாக வழங்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அக்டோபர் 31-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் கூடுதலாக 25 சதவீதம் டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் வெளியிட்டனர்.


Top