logo
அரசின் நேரடி பணி நியமனத்துக்கு  வயது உச்சவரம்பு உயர்வு

அரசின் நேரடி பணி நியமனத்துக்கு வயது உச்சவரம்பு உயர்வு

10/Oct/2020 12:46:01

அரசின் நேரடி பணி நியமனத்துக்கு  வயது உச்சவரம்பு உயர்வு


அரசின் நேரடி பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலர் ஸ்வர்ணா வெளியிட்ட அரசாணையின் விவரம்:

தமிழக அரசில் குறிப்பிட்ட சில பணிகளுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்தப் பணிகளில் சேர விரும்புவோருக்கு குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்புக்கு மேல் கூடுதலான கல்வித் தகுதி இருக்கக் கூடாது. 

இந்தப் பணிகளில் சேரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோருக்கு வயது உச்சவரம்பு 30-ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த வகுப்பினருக்கான வயது உச்சவரம்பு 32-ஆக திருத்தி ஆணையிடப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Top