logo
ஈரோடு அரசு மருத்துவமனையில் 43 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை

ஈரோடு அரசு மருத்துவமனையில் 43 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை

09/Oct/2020 11:17:13

ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலாக  70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் 69 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். ஒரு முதியவர் இறந்தார். இதனைத் தொடர்ந்து 35 நாட்களாக யாருக்கும் தொற்று ஏற்படாமல் இருந்தது.

பின்னர் சென்னை பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. முதலில் ஒற்றை இலக்கத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்  நாள்கள் செல்ல செல்ல அதிகளவில் பரவ தொடங்கியது. தற்போது மாவட்டங்கள் இடையே பொது போக்குவரத்து தொடங்கப்பட்டதாலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுநேர  கொரோனா  சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு கொரோனா  நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனை, தனியார் மண்டபங்களில், பள்ளிகளில் கொரோனாவுக்கு சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கென தனியாக 200 படுக்கைகள்  ஒதுக்கப்பட்டன.

மேலும், அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனி  வார்டுகள் ஒதுக்கப்பட்டன. ஈரோடு அரசு மருத்துவமனை  கொரோனா வார்டில் தற்போது 43 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  லேசான அறிகுறியுடன் 77 பேரும், மிதமான அறிகுறியுடன் 12 பேரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்துக் இருக்கின்றனர். முடிவில்  தொற்று  உறுதி செய்யப்பட்டால்  அவர்களுக்கு  கொரோனா வார்ட்டில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 


Top