logo
அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் பாமக சார்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் பாமக சார்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

09/Oct/2020 11:25:29

புதுக்கோட்டை: மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்  ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் காலை உணவு மற்றும் மரக்கன்றுகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதுக்கோட்டை, மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில், மாநில பொதுச்செயலாளர் முருகேசன் தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில்,மாவட்ட செயலாளர் பெரியசாமி. இளைஞரணி துணை செயலாளர் வீர.கமலநாதன், பழனிகுமார். ஒன்றிய செயலாளர்கள் துரைராஜன், கருப்பையா.வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் உள்பட திரளான  கட்சியினர் கலந்து கொண்டனர்.


Top