logo
புதுக்கோட்டை புதுக்குளத்தில் காவல்துறையினருக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி

புதுக்கோட்டை புதுக்குளத்தில் காவல்துறையினருக்கு பேரிடர் கால மீட்பு பயிற்சி

08/Oct/2020 05:01:52

புதுக்கோட்டை காவல்துறையினருக்கு பேரிடர் மீட்புப் பணி சார்பில் மழை வெள்ள காலங்களில் பொது மக்களை  மீட்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது

தமிழக அரசு உத்தரவின்படிகூடுதல் காவல் துறை இயக்குனர் செயலாக்கம் விசுவநாதன் ஆணையின்படி ஆண்டு தோறும் கடலோர மாவட்டங்களுக்கு 5 நாட்கள் மற்றும் கடலோர அல்லாத மாவட்டங்களுக்கு மூன்று நாட்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்படும்.

அதேபோல், நடப்பாண்டும், புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினருக்கு  காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் பேரிடர் மேலாண்மை பயிற்சி இன்று நடைபெற்றது.

 புதுக்கோட்டை புதுக்குளத்தில் பேரிடர் மீட்பு பணி சார்பில் வெள்ள காலங்களில் பொது மக்களை எவ்வாறு மீட்பது குறித்த பிரத்யேக மீட்பு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில்புது குளத்தின் நடுப்பகுதியில் காவல்துறை சார்ந்த ஒருவர் தண்ணீருக்குள் குதித்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சப்தமிடுவதும், அவரரை ரப்பர்  படகு மூலம்   மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு வருவது போன்ற பல்வேறு ஒத்திகைகள் நடைபெற்றது.

அதேபோல், 5 பேர் ரப்பர் படகில் செல்வது நடுப்பகுதியிலிருந்து தண்ணீருக்குள் குதித்து நீந்தி வருவது போன்ற ஒத்திகை நிகழ்ச்சியும், விபத்து காலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டால் அங்கு இருக்கும் பொருட்களை கொண்டே பொது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 61 காவலர்கள் பயிற்சி பெற்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்நகர காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் பயிற்றுனர்கள்  உள்பட பலர் உடனிருந்தனர்.

 

Top