logo
பொதுமக்களை ஏமாற்றி கொரோனா ஜூஸ் விற்றவர் கைது

பொதுமக்களை ஏமாற்றி கொரோனா ஜூஸ் விற்றவர் கைது

18/Mar/2020 06:31:21

திருவனந்தபுரம் அருகே கொரோனா தடுப்பு ஜூஸ் என பொது மக்களை ஏமாற்றும் வகையில் விற்பனை செய்த வெளிமாநில இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்தனர்.

 

கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையும், சுகாதார முறைகளையும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஜூஸ் என கூறி மக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார் ஒரு வெளிமாநில இளைஞர், இதனை உண்மையென நம்பி பொதுமக்களும் வாங்கி அருந்தியுள்ளனர். இதை பொதுமக்கள் சிலர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், அந்தப்பகுதி காவல்துறைக்கும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த அதிகாரிகள் இளைஞரை விசாரித்தபோது இஞ்சி, எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து ஜூஸ் தயாரிப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த இளைஞரை கைது செய்து கடுமையாக எச்சரித்தும் காவல்துறை அவரை விடுவித்தனர்

Top