logo
ஈரோட்டில் லட்சிய திமுக சார்பில் ஜெயலலிதா உருவச்சிலைக்கு மரியாதை

ஈரோட்டில் லட்சிய திமுக சார்பில் ஜெயலலிதா உருவச்சிலைக்கு மரியாதை

25/Feb/2021 12:53:05

ஈரோடு, பிப்: ஈரோட்டிலுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு லட்சிய திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  லட்சிய திமுக நிறுவன தலைவர் டி ராஜேந்தர்  ஆணைக்கிணங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர், ஈரோடு மாவட்ட செயலாளர் கௌரி சங்கரன் தலைமையில்  ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோட்டிலுள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 இதில் ஈரோடு மாநகர கழக செயலாளர் ஆதித்யன் ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ். டி. ஆர். ராஜா ஆறுமுகம் மணிகண்டன், விக்னேஷ், சூர்யா, தீனா, சிகாமணி மற்றும் கட்சி தொண்டர்கள்  திரளாக கலந்து கொண்டனர். 


Top