logo
மூன்றாவது மொழி விவகாரத்தில் திமுக நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கிறது: பாஜக தலைவர் எல். முருகன் பேட்டி

மூன்றாவது மொழி விவகாரத்தில் திமுக நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கிறது: பாஜக தலைவர் எல். முருகன் பேட்டி

07/Oct/2020 10:28:57

புதுக்கோட்டை: மூன்றாவது மொழி விவகாரத்தில்  நவீன தீண்டாமையை திமுக கடைப்பிடிக்கிறது என்றார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தாளம்பட்டியில் திருமயம் ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமையில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த பினனர் செய்தியாளர்களிடம் மேலும்   அவர் கூறியது

சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக ஏற்கெனவே தயாராக உள்ளதாகவும் கொரோனா நிவாரண பொருட்கள் பாஜக சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மை திருத்தச்சட்டத்தை விளக்கி மாநிலம் முழுவதும் கூட்டங்கள் கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம்.

இந்தி மொழியை யாரும் திணிக்கவில்லை. ஒரு மொழியை கற்றுக்கொள்ள மக்கள் தயாராக உள்ளனர். தமிழ் நாட்டிலுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் தமிழ், ஆங்கிலத்துடன் இன்னொரு மொழியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்தி மொழியை எதிர்க்கும் திமுக எம்பி-க்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு எதற்காக சிபாரிசு கடிதம் கொடுக்கிறார்கள்.

திமுகவில் உள்ளவர்கள் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 60-க்கும் மேற்பட்ட பள்ளிகள் நடத்துகிறார்கள்அதில் இந்தி மொழியை கற்றுக் கொடுக்க மாட்டோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும் என்று விளம்பரப் பலகை வைத்து மாணவர் சேர்க்கை நடத்த தயாரா.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்பது தான் திமுகவின் நோக்கம். இப்பிரச்னையில் திமுக ஒரு நவீன தீண்டாமையை  பின்பற்றுகிறது. அதிமுக ஒரு ஜனநாயக கட்சி அவர்களுக்குள்ளே கருத்துகளை பேசிக்கொண்டிருந்தார்கள். தற்போது  முடிவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்நாங்கள் அதைவரவேற்கிறோம் தற்போது  வெளியிடப்பட்ட பாஜக நிர்வாகிகள் பிரதான பட்டியலில் பல மாநிலங்கள் வரும் பல மாநிலங்கள் வராது.

அடுத்தடுத்த பட்டியல்களில் தமிழக பாஜகவினருக்கு வாய்ப்பு கிடைக்கும் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம் ஏற்க கூடியது அல்ல. இதில், அரசு நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை .கைது செய்துள்ளது.மேலும் அந்த வழக்கை சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சம்பவதிற்காக போராடும் திமுகவினர் செங்கல்பட்டில்  தலித் இனத்தைச் சேர்ந்த சகோதரியை மானபங்கப்படுத்தி தற்கொலைக்கு தூண்டப்பட்டு உயிரிழந்தார். இதைப்பற்றியும் திமுகவினர் பேச வேண்டும்.பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை அரசியலாக்க பார்க்கிறார்கள்.

இதை வைத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திமுகவினர் நினைக்கிறார்கள் அது நடக்காது அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.அடுத்து ஆட்சி அமைக்கப்போவது அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி தான்.கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 90 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயித்துள்ளது.

மத்திய அரசு விவசாயிகளின் வங்கி கணக்கில் கிசான் திட்ட பணத்தை வரவு வைப்பதா தான் சொன்னது. ஆனால், சில அதிகாரிகளும் சில ஏஜென்சிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. கிசான் திட்டம் விவசாயிகளுக்கு எளிமை படுத்துவதற்காக ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டது நிவாரண தொகையை சரியான விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்றார் எல். முருகன்.

                                                                              

        

Top