logo
யெஸ் வங்கி சேவை இன்று மாலை முதல் மீண்டும் தொடக்கம்

யெஸ் வங்கி சேவை இன்று மாலை முதல் மீண்டும் தொடக்கம்

18/Mar/2020 05:43:16

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தடை விதித்திருந்த யெஸ் வங்கி இன்று(மார்ச்18) மாலை 6 மணி முதல்  வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து வங்கிச் சேவைகளையும் மீண்டும் தொடங்குகிறது என்றும், பணப்புழக்க பிரச்னை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

யெஸ் வங்கியின் பணப்பரிவா்த்தனைகளுக்கு ரிசா்வ் வங்கி கடந்த மார்ச் 5-ஆம் தேதி கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, யெஸ் வங்கி டெபாசிட்தாரா்கள் ஏப்ரல் 3 வரையில் ரூ.50,000 மட்டுமே பணம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது இந்தநிலையில், யெஸ் வங்கியில் புனரமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது  இதையடுத்து யெஸ் வங்கி வாடிக்கையாளா்களுக்கு இன்று (மார்ச்18)மாலை 6 மணி முதல் தனது முழு அளவிலான வங்கிச் சேவையை மீண்டும் தொடங்குகிறது.  வாடிக்கையாளர்கள் தடைக்கு முன்னர் பெற்ற அனைத்து சேவைகளையும் பெற முடியும். வங்கியின் பணப்புழக்கத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை. வங்கியின் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் நிரப்பப்பட்டுள்ளன. வங்கியில் செலுத்தப்பட்டுள்ள வைப்புத்தொகையை குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட தேவையில்லை. எனவும் வார இறுதி நாட்களிலும் வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Top