logo
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை அருகே நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை அருகே நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

07/Oct/2020 09:41:53

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வெள்ளாளவிடுதி கிராமத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த இரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீண்டும்  திறக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு(அக்.4) கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த கோரிக்கைகளை  நிறைவேற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் நேற்று திறக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள வெள்ளாளவிடுதி ஊராட்சிக்குள்பட்ட மங்களாக்கோயில் கிராமத்தில் கடந்த மூன்றாண்டு காலமாக 2 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தனஇந்த நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில்வெள்ளாளவிடுதி,மங்களாகோயில்இடையன்கொல்லைபட்டி, கண்ணுகுடிபட்டிஆத்தங்கரை விடுதி,மஞ்சம்பட்டி,வேலாடிபட்டி,நெற்புகை, சுங்கம்பட்டி,கொல்லம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர்.

இந்த பகுதி கிராமங்களில் மின்மோட்டார் வசதியுடன் குறுவை, சம்பா,கோடை ஆகிய மூன்று போக சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபடுவதால் நெல் உற்பத்தியும் அதிக அளவில் இருந்ததை அடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசால் கடந்த சில ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் பருவகாலத்தில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம்  மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

 இந்நிலையில், கோடை சாகுபடி முடிந்ததையடுத்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இக்கிராமத்தில் செயல்பட்டுவந்த இந்த இரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டன.

 நடப்பாண்டில் அதிக பரப்பளவில் செய்யப்பட்டிருந்த குறுவை சாகுபடி முடிவடைந்து நெல் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரையில் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல்முட்டைகளை விற்க முடியாமல்  சிரமப்பட்டு வந்தனர். அரசு விரைவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை டிராக்டர்கள் மூலம்  கொண்டுவந்து அந்த மையங்களில் குவிக்கத்தொடங்கினார்.

ஆனால்நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லைஇதன்காரணமாக பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டது. மழையில் நெல் மூட்டைகள் சேதம் அடைந்தால் விவசாயிகள் கடன் வாங்கி செலவு செய்த பணத்தை  திரும்ப செலுத்த முடியாத  நிலை ஏற்படும் என்று விவசாயிகள் தங்களது வேதனை தெரிவித்தனர். இப்பிரச்னை தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதையடுத்து இப்பிரச்னையை கவனத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் மறுநாளே  வெள்ளாளவிடுதி ஊராட்சிக்குள்பட்ட  பகுதிகளில் மூடப்பட்டிருந்த அரசின்நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.இதனையடுத்து அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ ஆறுமுகம் திறந்து வைத்தார். இதில்வெள்ளாளவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்

Top