logo
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கம்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கம்:

11/Oct/2022 06:21:18

   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வருகிற 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இந்த பஸ்களுக்கு முன்பதிவு செய்யலாம். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு நடைபெறும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் திங்கட்கிழமை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கோபால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  கூட்டம் முடிந்ததும் சிறப்பு பஸ்கள் தொடர்பான தகவல்களை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருகிற 21-மந் தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தம் 10,518 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16,888 பஸ்கள் இயக்கப்படும் என்று கூறினார்.


Top