logo
நீதிமன்ற உத்தரவை மீறி கடையை இடித்த கோவில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவை மீறி கடையை இடித்த கோவில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

05/Oct/2020 06:12:48

புதுக்கோட்டை:  நீதி மன்ற உத்தரவை மீறி பல ஆண்டுகளாக வைத்திருந்த கடையை இடித்த ஆவுடையார்கோவில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு. 

ஆவுடையார்கோவில் தெற்கு வீதியைச் சேர்ந்த எம்.முத்துக்குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன் ஆகியோருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனு விவரம்:

திருவாடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட ஆவுடையார்கோவில்  ஆத்மநாதசுமாவமி கோயிலுக்குச் சொந்தமான இடங்களை கடந்த 45 ஆண்டுகளாக எங்கள் குடும்பம் அனுபவம் செய்து வருகிறது. கடந்த 2012 முதல் அதில் உள்ள கடைகளுக்கு வாடகையும், விவசாய நிலத்திற்கு 2018 வரை குத்தகையும் கொடுத்து வந்துள்ளோம். இந்நிலையில், கட்நத 2012-க்குப் பிறகு கோவில் நிர்வாகம் கடை வாடகையினை வாங்க மறுத்து வருகின்றனர். வாடகையை வங்கி காசோலை மூலமாக அனுப்பியபோதும் ஏற்காமல் கோயில் நிர்வாகம் திருப்பி அனுப்பிவிட்டனர்.

இதுதொடர்பாக,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தேன். நீதி மன்றம் 2020 வரையிலான கடை வாடகை மற்றம் விவசாய நிலத்திற்கு குத்தகைப் பணம் வைப்புத் தொகையாக கோவில் நிர்வாகத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கு வங்கி காசோலை எடுத்து கோவில் நிர்வாகத்திற்கு அனுப்புமான எனக்கு இடைக்கால உத்தரவு வழங்கியது. அதன்படி தொகையை அனுப்பி அதற்கான ரசீதும் பெற்றுள்ளேன்.

இந்நிலையில், நான் வாடகைக்கு இருந்த கடையை கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்ற உத்தரவை மீறி இடித்துள்ளனர். இதுதொடர்பாக ஆயுவடையார்கோவில் காவல் நிலையத்திலும், வருவாய்த்துறையிலும் மனுக்கொடுத்து  முறையிட்டுள்ளேன். எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், நான் குத்தகைக்கு விவசாயம் செய்துவரும் நிலத்திலும் உழவடை செய்யவிடாமல் கோயில் நிர்வாகம் தடுத்து வருகின்றனர்.

எனவே, எனது கடையை எந்த முன்னறிவிப்பும் இன்றியும், நீதிமன்ற உத்தரவை மீறியும் இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் அனுபவத்தில் உள்ள விவசாய நிலத்தில் என்னை அனுபவம் செய்ய விடாமல் தடுத்துவரும் உள்ள கோயில் நிர்வாகத்தினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top