logo
திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ள ஈரோடு  மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்  ஒன்பது மாடி புதிய கட்டிடம்

திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ள ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒன்பது மாடி புதிய கட்டிடம்

28/Aug/2021 11:29:57

ஈரோடு, ஆக:  ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கூடுதல் 9 மாடி கட்டிடம்  பணிகள் முடித்து, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

ஈரோட்டில் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான கட்டடத்தில் 6 க்கும் மேற்பட்ட துறைகள், அதற்கான அலுவலகங்கள் உள் ளன. இடவசதி குறைவால் பல துறைகள், அலுவலகங்கள் வாடகை கட்டடங் களில், இதை இயங்குகின்றன. ஒரே இடத்தில் கொண்டு வரும் நோக்கில், பிரதான கட்டடத்தின் பின் புறம், 41.6 கோடி ரூபாயில் கூடுதல் கட்டடம் கட்ட 2018 ஜூன் 1 -இல் பணி தொடங்கியது.

இரு தரைத்தளம். ஏழு மேல் தளம் என, ஒன்பது தளங்களில் தரை தளங்கள் வாகன நிறுத்தமாக பயன்படுத்த வசதி செய்துள்ளனர் 7 மேல் தளங்களில் 30-க்கும் மேற்பட்ட துறைகள் அதற்கான அலுவலர்களுடன் கட்டி முடித்துள்ளனர் 1.84 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள கட்டிடத்தில் 13 பேர் பயணிக்கும் தலா நான்கு லிப்ட், கழிப்பறை, பழைய கட்டடத்தை இணைக்கும் நடைபாலம், அவசர வழி, டிஜிட்டல் நூலகம். கூட்ட அரங்கங்கள் கட்டி முடித்துள்ளனர்.

பணிகளை, 2020 ஜூன் மாதம் முடிக்க மிட்டிருந்தனர். கொரோனா, ஊரடங்கு. வடமாநில தொழிலா ளர்கள் சொந்த ஊர் சென் றதால் கூடுதலாக. மாதங்களாகி 14 விட்டது. தற்போது அனைத்து பணி களும் நிறைவு செய்து. திறப்பு விழாவுக்கு தயாராக வைத்துள்ளனர். இக்கட்டிடம்  திறக்கப்பட்டால், ஆர்டிஓ அலுவலகம், தாசில்தார் சி.இ.ஒ., அலு வலகம் உட்பட பல்வேறு துறை ஒரே இடத்தில் அமையக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Top