logo
புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம்  சார்பில்தேசிய கண் தான தினம்

புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்தேசிய கண் தான தினம்

27/Aug/2021 01:25:20

புதுக்கோட்டை, ஆக:  தேசிய கண் தான தினம்  புதுக்கோட்டை  பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஸ்ரீ கண்ணப்பநாயனார் கண் தான பிரச்சார மையத்தில்  நடைபெற்றது.

  சங்கத் தலைவர்  பொறியாளர்   ஆர்.எம்.துரைமணி் தலைமை வகித்தார்.  போக்குவரத்து காவல் ஆய்வாளர் பி.பிரான்சிஸ் மேரி சிறப்பு அழைப்பாளராக கலந்ததுகொண்டார். ஸ்ரீ கண்ணப்பநாயனார் கண் தான பிரச்சார மையத்தின் தலைவர் சி.கோவிந்தராஜன் முன்னிலை வகித்து,   கண் தான படிவங்களையும்    விழிப்புணர்வு கையேடுகளையும்  வழங்கி பேசியதாவது: 

தானத்தில் சிறந்தது  கண் தானம், ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுவது கண்.  சில காரணங்களால் லட்சக்கணக்கானோர் பார்வை இன்றி தவிக்கின்றனர். ஆனால், கண்தானம் செய்வதன் மூலம் அவர்களும் பார்வை பெற முடியும். நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை. இதனை தானம் அளிப்பதன் மூலம் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  தேசிய கண்தான தினம் ஆகஸ்டு  25 முதல் செப்டம்பர்  8 -ஆம் தேதி  வரை கடைப்பிடிக்கப்படுகிறது            

கண்ணின் முக்கிய உறுப்பான கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது. விழித்திரையில் பிம்பம் படியாததால், பார்வை தெரிவதில்லை. தொற்று நோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாட்டால் சிலருக்கு பிறவியிலேயோ, பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது.

கார்னியாவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, தானம் கிடைக்கும் கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டி.பி., ரத்தக்கொதிப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம்.

உலகில் மொத்தம் உள்ள பார்வையற்றவர்களில் பாதி பேர் நம்நாட்டில் உள்ளனர். இங்கு 1.50 கோடி பார்வையற்றவர்கள் உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் கார்னியா குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1.06 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  கண் தானம்   மூலம் 2017-இல் 1,844 கார்னியா பெறப்பட்டுள்ளது. பார்வை இழப்பில் 75 சதவீதம் தடுக்கக் கூடியது. இதுவே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சம். கடந்த 52 ஆண்டுகளில் 26 ஆயிரம் கார்னியாக்கள் தானம் பெறப்பட்டுள்ளன.கண் தானம் செய்வோம் கண் தானம் செய்வோம் என்றார் அவர். 

புதுக்கோட்டை  பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எம். துரைமணி, செயலாளர் பாஸ்கர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பி.பிரான்சிஸ் மேரி ஆகியோர்  கண்ணப்பநாயனார் கண் தான பிரச்சார மையத்தின் தலைவர் சி.கோவிந்தராஜனிடம்    கண் தான படிவங்களை பெற்றுக்கொண்டார் .  நிறைவாக  பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க  செயலாளர் பாஸ்கர் நன்றிகூறினார். 


Top