logo
ஈரோட்டில்  212 இடங்களில் 14 ஆயிரத்து 30 பேருக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி

ஈரோட்டில் 212 இடங்களில் 14 ஆயிரத்து 30 பேருக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி

27/Aug/2021 12:48:37

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் 9.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  ஈரோடு மாவட்டத்தில்    ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 182 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 30 இடங்களிலும் என மொத்தம் 212 இடங்களில் 11 ஆயிரத்து 610 பேருக்கு டோக்கன் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகம்  நடைபெற்றது. 

இதேபோல், கோவேக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசிஈரோடு மாவட்டத்தில் உள்ள  66 ஆரம்ப சுகாதார மையங்களில் 2420 பேருக்கு போடப்பட்டது. இதில் ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் 300 பேருக்கு போடப்பட்டுள்ளது. இவ்வாறாக இன்று மட்டும் மொத்தம் 14 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.  மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Top