logo
ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில் 68  மி.மீ மழை  பதிவு

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில் 68 மி.மீ மழை பதிவு

25/Aug/2021 05:47:27

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில் 68  மி.மீ மழை  பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பகல் முழுவதும் வெயில் அடித்து வந்தாலும் மதியம் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில்,  திங்கள்கிழமை ரோடு மாவட்டத்தில் 3 -வது நாளாக பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து உள்ளது. கொடுமுடி, சாலைப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்  மதியம் 2 மணி முதல் 3.30  மணி வரை பலத்த மழை பெய்தது. இதைப்போல் குண்டேரிபள்ளம் பகுதியில் பலத்த மழை பெய்தது. 

மொடக்குறிச்சி, ஈரோடு, சென்னிமலை, பெருந்துறை, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கியது. மதியம் 2.30 மணிக்கு பிறகு சாரல் மழை தூறிக் கொண்டே இருந்தது. இரவு நேரங்களிலும் சாரல் மழை பெய்தது.  

ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:- கொடுமுடி - 68, குண்டேரிபள்ளம் - 30.6, மொடக்குறிச்சி - 16, ஈரோடு - 12, சென்னிமலை - 9.4, பெருந்துறை - 9,  வரட்டுப்பள்ளம் - 4.4, பவானி - 2.8, பவானிசாகர் - 1.2, கோபி - 1

Top