logo
பெருந்துறை அருகே கீழ் பவானி வாய்க்கால்உடைப்பின்  காரணமாக பாதிக்கப்பட்ட  மக்களுக்கு எம்எல்ஏ .ஜெயக்குமார்  நிவாரண உதவிகள் அளிப்பு

பெருந்துறை அருகே கீழ் பவானி வாய்க்கால்உடைப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏ .ஜெயக்குமார் நிவாரண உதவிகள் அளிப்பு

24/Aug/2021 09:28:31

ஈரோடு, ஆக: ஈரோடு, பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியவிலாமலை ஊராட்சி, கண்ணவேலம் பாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் உடைப்பு ஏற்பட்டு பாசனத்துக்கு திறக்கப்பட்ட பல ஆயிரம் கன அடி தண்ணீர் விவசாய பகுதிகளுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் புகுந்து சேதமடைந்தன.

இதன் காரணமாக  முள்ளம்பட்டி ஊராட்சி வரவங்காடு கரைக்காடு, மலைப்பாளையம், பகுதிகளில் உள்ள 60 -க்கும்  மேற்பட்ட வீடுகளில்  தண்ணீர் புகுந்தது. இதனால் இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும், தொழுவத்தில் இருந்த ஆடு, மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. நெல்,கரும்பு, மஞ்சள், வாழை பயிரிட்டிருந்த விளை நிலங்களில் பயிர்களும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் உடனடியாக அவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் உணவும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.


கடந்த மூன்று நாட்களாக மூன்று கிராம மக்களுக்கும் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இன்று பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயகுமார் அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.  ஏற்பாடுகளை முள்ளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி குழந்தைசாமி செய்திருந்தார்.

மேலும், வாய்க்காலில்  கான்கிரீட் பணி நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடமும், ஒப்பந்ததாரரிடமும் பணிகளை உறுதியாகவும், துரிதமாகவும் முடித்து விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் தண்ணீர் திறப்புக்கு ஏதுவாக பணி முடித்துக் கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

சட்டமன்ற உறுப்பினருடன் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி ஜெயராஜ், வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை ஒன்றிய துணைத் தலைவர் உமா மகேஸ்வரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஓ.ஆர். பழனிச்சாமி.

கிளைக் கழகச் செயலாளர்கள் வரவங்காடு பழனிச்சாமி, சிவகுமார், ஜெகதீஸ், பழனிச்சாமி, கவியரசு,பரமேஸ்வரன்,மாதன், மோகன்ராஜ், தனபால், கருப்பட்டி சம்மேளன துணைத் தலைவர் ராஜேந்திரன், பெத்தாம்பாளையம் கோபால், ரஞ்சித் ராஜ் ( எ) வைகை தம்பி,கேபிஎஸ் மணி, ஹிட்டாச்சி பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Top