logo
நகரும் நியாயவிலைக் கடைகள் திட்டம்:தேனியில் துணை முதல்வர் தொடக்கி வைத்தார்

நகரும் நியாயவிலைக் கடைகள் திட்டம்:தேனியில் துணை முதல்வர் தொடக்கி வைத்தார்

05/Oct/2020 01:01:35

தேனி அருகே நாகலாபுரத்தில்அரசு சார்பில் நகரும் நியாயவிலைக் கடைகள் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  திங்கள்கிழமை  தொடக்கி வைத்தார்.

நாகலாபுரம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் அருகே மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகரும் நியாய விலைக் கடை வாகனங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இத் திட்டத்தின் கீழ் தேனி வட்டாரத்தில் 11 கடைகள், பெரியகுளம் வட்டாரத்தில் 16, ஆண்டிபட்டி வட்டாரத்தில் 33, போடி வட்டாரத்தில் 7, உத்தமபாளையம் வட்டாரத்தில் 8 கடைகள் என மொத்தம் 75 நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட உள்ளது. இதில், தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன்,  தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top