logo
தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு: வீடுகளிலேயே மாணவர்களை தயார் படுத்தும் பணி தொடக்கம்

தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு: வீடுகளிலேயே மாணவர்களை தயார் படுத்தும் பணி தொடக்கம்

18/Aug/2021 11:05:40

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு  எழுதவுள்ள மாணவர்களை  வீடுகளிலேயே தயார் படுத்தும் பணி தொடங்கப் பட்டுள்ளது.

 இது குறித்து, புதுக்கோட்டை அருகேயுள்ள   மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  அறிவியல் ஆசிரியர் ப.மகேஸ்வரன் தெரிவித்தாவது:

புதுக்கோட்டை அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த கல்வி ஆண்டில்(2021-2022)நடைபெற இருக்கும் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத இருப்பவர்களுக்கு  வாட்ஸ்ஆப் அஞ்சல் குழு  அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத இருப்பவர்கள் விடுபட்டு இருந்தால் உடனடியாக இந்தக்குழுவில்  இணைந்து கொள்ளலாம். தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை  மாணவர்களின் இல்லங்களில் நான்கு இடங்களில் முதல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. தேர்வுக்கு தேவையான குறிப்புகள், வழிகாட்டுதல்கள், முந்தைய தேர்வு வினா விடைகள்.

மாதிரி தேர்வு பயிற்சி வினாக்கள், க்யூ ஆர் கோடு பயிற்சி வினாக்கள், பாடத்தின் முக்கிய குறிப்புகள், பாடத்தினை படிக்க உரிய வழிகாட்டுதல், பாடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வினாக்கள் உருவாகக்கூடிய விதம் போன்ற பயிற்சிகள் தரப்பட்டு சில குறிப்பு நகல்களும் தரப்பட்டன.

மேலும் மனத்திறன் வினாக்களுக்கு உரிய வினாவிடை குறிப்பிடும் மற்றும் யூடிப் வீடியோ ( youtubeVideo ) பார்க்கக் கூடிய வழிமுறைகளும் ஆசிரியர் அனுப்பக்கூடிய பிடிஎப்- பைல் (Pdf file)-ஐ பார்க்கக்கூடிய வழிமுறையும், இன்றைய முதல்கட்ட பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்பட்டன.

இந்தக்குழுவில்,  தினசரி பாடம் சார்ந்த குறிப்புகளும் வீடியோக்களும் பிடிஎப்  பைல் ஆக அனுப்பப்படும்ஆடியோ  குறிப்பும் தரப்படும்.  தேவையான பாடத்தில் புரியாத பகுதிகளுக்கு உரிய விளக்கம், அந்தந்த பாட ஆசிரியர்கள் மற்றும் சிறந்த கல்வியாளர்களின் உரிய வழிகாட்டுதலும் சேர்த்து தரப்படும்.

புரியாத பகுதிகளை இந்த குறிப்பிலேயே கேட்டு மாணவர்கள் தெளிவு பெறலாம் அல்லது நேரிலேயே அடுத்த பயிற்சி வகுப்பிற்கு வீட்டுக்கு வருகின்ற பொழுது  கேட்டுத் தெளிவு பெறலாம். வலைதளங்கள் மூலம் நடைபெறும் ஆன்லைன்  தேர்வில் பங்கேற்க  பயிற்சிபெற உரிய வழிகாட்டுதல் தரப்படும் என்றார் அவர். 


Top