logo
ஆக.13-இல் தொடங்கி செப். 21 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

ஆக.13-இல் தொடங்கி செப். 21 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

10/Aug/2021 11:25:22

சென்னை, ஆக: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் முழு நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழக நிதிநிலை அறிக்கையை நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரும் 13-ம் தேதி தாக்கல் செய்கிறார்.

இதைத் தொடர்ந்து, வேளாண் துறை குறித்த நிதிநிலை அறிக்கை 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பின்னர், ஆகஸ்ட் 16 முதல் 19 வரை நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் துறை குறித்த நிதிநிலை அறிக்கை மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன.

இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளன. செப்டம்பர் 21-ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

Top