logo
புதுக்கோட்டை ரோட்டரி சங்கங்கள் சார்பில்  அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.23 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்: அமைச்சர் வழங்கல்

புதுக்கோட்டை ரோட்டரி சங்கங்கள் சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.23 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்: அமைச்சர் வழங்கல்

09/Aug/2021 09:33:05

புதுக்கோட்டை, ஆக:  புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில்  ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் இரத்த வங்கி சேமிப்பு உபகரணங்கள் அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்டும்   கருவிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (08.08.2021) புதுக்கோட்டை அரசு இராணியார் மகப்பேறு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினார்.


 பின்னர்,  சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  கூறியதாவது: தமிழக முதல்வர்  கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.  அதன்படி கொரோனா காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் இரத்த வங்கி சேமிப்பு உபகரணங்களை புதுக்கோட்டை அரசு இராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கும் மற்றும் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்டும்  கருவிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை புதுக்கோட்டைஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனைத்து நோயாளிகளும் பயனடையும் வகையில் புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில்வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த பயனடைவார்கள். 

சமூக நலப்பணிகளை இதுபோன்ற நிறுவனங்கள் செய்து வருவதால், கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசிற்கு உறுதுணையாக இருப்பதால் தமிழக முதலமைச்சர் எடுக்கின்றஅனைத்து முயற்சிகளின் மூலம் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை அரசு இராணியார் மகப்பேறு மருத்துவமனையில் வரும்; காலங்களில் அதிகமாக இரத்த சேமிப்பு செய்து  இரத்த வங்கியின் பணிகளின் மூலம் ஏழை, எளிய பொதுமக்கள் மிகவும் பயன் பெறுவார்கள் என்றார் அவர்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா , புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, ரோட்டரி சங்கத் தலைவர் தனஞ்ஜெயராமசந்திரன், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் கனகராஜன், உடனடி முன்னாள் கவர்னர் அ.லெ. சொக்கலிங்கம், முன்னாள் நகர்மன்றதுணைத் தலைவர் க.நைனாமுகமது, அரு.வீரமணி, சுப.சரவணன், க.ராமகிருஷ்ணன், வர்த்தக சங்க முன்னாள் தலைவர் சேவியர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

 

                                                   

        


Top