logo
கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக  ஈரோடு மாவட்டத்திலுள்ள கோயில்களில் சுவாமி  தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்திலுள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது

07/Aug/2021 12:32:50

ஈரோடு, ஆக: கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக  ஈரோடு மாவட்டத்திலுள்ள   கோயில்களில் சுவாமி  தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  வரும் ஞாயிற்றுக்கிழமை(8.8.2021) ஆடி அம்மாவாசை அன்று கோவில்களில் சென்று பொதுமக்கள் வழிபடவோ, நீர் நிலைகளில் புனித நீராடவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில்களில் பொதுமக்களுக்கு வழிபட அனுமதி மறுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில்  பண்ணாரி அம்மன் கோயிலில் காலையில் அம்மனை தரிசிக்க நூற்றுக்கணக்கான பக்தர்கள்  வந்திருந்தனர். ஆனால் கோவில் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கோவில் வாசல் முன்பு நின்று அம்மனை வழிபட்டுச் சென்றனர். இதைப்போல் பவானி சங்கமேஷ்வர் கோவிலிலும் பொதுமக்களுக்கு வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கோயில் முன்பு மக்கள் நின்று வழிபட்டு சென்றனர். 

கோபி கொண்டத்துக்காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், ஈரோடு மாநகர் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், கள்ளுகடை மேடு பத்திரகாளியம்மன் கோவில் உள்பட  கோவில்களிலும் இன்று பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கோவில் முன்பு வழிபட்டுச் சென்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூட்டம்  கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Top