logo
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு:

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு:

18/Mar/2020 01:22:52

திராவிட முன்னேற்ற கழகத்தின்  பொது செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளார். இதனால் தற்போது அவர் வகிக்கும் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

திமுகாவில் 43 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன், மார்ச் 7 ஆம் தேதி காலமானார். இதனை அடுத்து புதிய பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதில் பல மூத்த தலைவர்கள் பெயரும் அடிப்பட்டன. அதில் துரைமுருகனுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறிவந்த நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில் இன்று அவர் வகித்த பொருளாளர் பொருப்பிலிருந்து விலகியுள்ளார். மேலும் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, ..வேலு, பொன்முடி ஆகிய 3 பேரில் யாராவது ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 29-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்வு நடக்கும் என்று அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பொதுக்குழு கூட்டம் மார்ச் 31 வரை ஒத்திவைப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Top