logo
புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில்  கொரோனா விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

05/Aug/2021 11:31:23

 புதுக்கோட்டை, ஆக:  புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில். கொரோனா  விழிப்புணர்வு முகாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்   சங்க தலைவர். துரை மணி தலைமையில் நடைபெற்றது.

மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் எம் . பூவதி  பங்கேற்ஏறு  விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் முக கவசத்தையும்   வழங்கி  கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசினார். இதையொட்டி, கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழிஅனைவரும் எடுத்துக்கொண்டனர்.

 மருத்துவக்கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கு நடத்தப்பட்டகொரோனா  19 விழிப்புணர்வு ஓவியத்தை  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பார்வையிட்டனர் சிறந்த ஓவியங்களை,  தலைவர்  துரை மணி தேர்ந்து எடுத்தார்.

மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் கலையரசி, ஆர்.எம்ஒ  டாக்டர்   இந்திரா, கண்காணிப்பாளர்  டாக்டர்   ராஜ்மோகன், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் துணை ஆளுநர் ஆர். கருணாகரன்.ம,ன்னாள் தலைவர்கள்  கருப்பையா மற்றும் ரவிச்சந்திரன், லெட்சுமணண்,சுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மருத்துவர் சரவணன் வரவேற்றார் .  ரோட்டரி சங்க செலாளர் பாஸ்கர் நன்றி தெரிவித்தார்  


Top