logo
புதுக்கோட்டையில் காவலர்  தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்  நிறைவு

புதுக்கோட்டையில் காவலர் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் நிறைவு

04/Aug/2021 04:19:59

புதுக்கோட்டை, ஆக:  புதுக்கோட்டை யில் இந்தியன் பயிற்சி அகாதெமி  சார்பில் கடந்த  7 மாதங்களாக  காவலர்  தேர்வுக்கானஇலவச உடற்பயிற்சியினை புதுக்கோட்டை   சமஸ்கிருதவித்யாலய ஓரிண்டல்  உயர்நிலைப்பள்ளி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செம்பாட்டூர் கே.முத்துராமலிங்கம் சுமார் 150 -க்கும்  மாணவ மாணவிகளுக்கு பல்வேறு உடற்பயிற்சி  அளித்து வந்தார்.


 பயிற்சி நிறைவுநாளில்  [04.08.2021]  சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டைஎம்எல்ஏ டாக்டர்  வை. முத்துராஜா பங்கேற்று  பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பயிற்சி  அளித்த நிறுவுனர் மு.அன்புக்கரசி , உடற்கல்வி ஆசிரியர் செம்பாட்டூர்  கே.முத்துராமலிங்கம், உடற்கல்வி ஆசிரியர்  கந்தசாமி,சரவணன் ஜான்பார்த்திபன் , பாலா, பாஸ்கரன் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்,


Top