logo
யூ.டியூப் வீடியோவைப் பார்த்து துப்பாக்கி தயாரித்த செய்த 2 பேர்  கைது.

யூ.டியூப் வீடியோவைப் பார்த்து துப்பாக்கி தயாரித்த செய்த 2 பேர் கைது.

04/Oct/2020 06:13:38

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே யூடியூப் வீடியோவை பார்த்து கள்ளத்துப்பாக்கி தயார் செய்த 2 பேரை கைது  போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து  துப்பாக்கி செய்வதற்கான  மூலப்பொருட்களையும் இன்று பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி அருகே இரண்டு நபர்கள் கள்ளத் துப்பாக்கி தயாரித்து வருவதாக  கிடைத்த ரகசியத்தகவலின் போரில் கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அழகம்மாள் தலைமையிலான போலீஸார்  மேட்டுப்பட்டி, உடையநேரி காலனியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த மாரிமுத்து மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரிடமும் போலீஸார்நடத்திய  விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனராம். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டுக்குள்  நடத்திய அதிரடி சோதனையில் அங்கு கள்ளத் துப்பாக்கி செய்வதற்கு தேவையான கரிக்கட்டை, வெல்டிங் மிஷின் இரும்பு குழாய்கள் போன்ற மூலப் பொருள்களும், ஒரு நாட்டுத்துப்பாக்கியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இருவரிடமும்  நடத்திய தீவிர விசாரணைக்குப்பிறகு, யூ.டியூப் சேனலில் இருந்த  துப்பாக்கி செய்வது எப்படி என்ற வீடியோவை பார்த்து  துப்பாக்கி செய்ய வேண்டும் என்ற ஆசையில் மூலப் பொருட்களை வாங்கி வைத்து ஒரு துப்பாக்கியை தயாரித்ததாகவும் ஒப்புக்கொண்டனர். 

இதையடுத்து, கள்ளத்துப்பாக்கி தயாரித்த குற்றத்துக்காக மாரிமுத்து, சிவக்குமார் ஆகியோர் மீது கணேஷ்நகர் போலீஸார்  வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


                                                                               

        


Top