logo
கீழடியில் தமிழக அரசு அருங்காட்சியகம் அமைக்க  தமிழக முதல்வருக்கு எம்பி வெங்கடேசன் கோரிக்கை

கீழடியில் தமிழக அரசு அருங்காட்சியகம் அமைக்க தமிழக முதல்வருக்கு எம்பி வெங்கடேசன் கோரிக்கை

30/Jul/2021 01:56:37

மதுரை,ஜூலை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் அரசு அருங்காட்சியகம் அமைக்க முன் வர வேண்டுமென   தமிழக முதல்வருக்கு மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்: ஒன்றிய அரசின் தொல்லியல்துறை நாளந்தா. சாரநாத், லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதியில் நடத்திய அகழாய்வுகளை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகங்களாக அமைத்துள்ளது.

அதேபோன்று, தமிழக அரசும் கீழடி மற்றும் சிவகலை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியகங்களை உருவாக்க வேண்டும். அகழாய்வு குழிகள் காலத்தின் கண்ணாடி போன்றது. கண்டுபிடிப்புகளை இருப்பிடம் விட்டு அகலாமல் காட்சிப்படுத்துவது வரலாற்று துறைக்கு செய்யும் நேர்மையான பங்களிப்பாகும்.

அந்த வகையில் கீழடி மற்றும் சிவகலையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க, வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும் அதில் வலியுறுத்தியுள்ளார்.


Top